ஒன்னு, ரெண்டு ஓட்டைகளை அடைக்கலாம்.. ஆனால், தோல்விக்கு பின் விரக்தியில் தோனி
சென்னை அணி தோல்விக்கான காரணம் குறித்து கேப்டன் தோனி பேசியுள்ளார்.
சிஎஸ்கே தோல்வி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியை சந்தித்தது. இதனால் அதிகாரப்பூர்வமாக பிளே ஆப்பில் இருந்து வெளியேறி உள்ளனர்.
இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 7ல் தோல்வி அடைந்துள்ளனர். இந்நிலையில், ஐபிஎல் 2025க் காண பிளே ஆப் ரேஸில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியேறிய நிலையில் இதற்கான காரணம் குறித்து தோனி பேசியுள்ளார்.
”இது போன்ற ஒரு போட்டியில், நீங்கள் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் ஓட்டைகளை நிரப்ப முடிந்தால் அது நல்லதுதான். ஆனால் உங்கள் பெரும்பாலான வீரர்கள் சிறப்பாக செயல்படவில்லை என்றால், அது மிகவும் கடினமாகிவிடும். ஏனென்றால் நீங்கள் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும்.
தோனி ஆதங்கம்
ஆனால் பெரும்பாலான வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டால், அந்த வீரர்களுக்கு கூடுதலாக சில ஆட்டங்களைக் கொடுக்க வேண்டும். அது பலனளிக்கவில்லை என்றால், அடுத்த ஆட்டத்திற்குச் செல்லுங்கள். ஆனால் அவர்களில் 4 பேர் ஒரே நேரத்தில் சிறப்பாகச் செயல்படவில்லை என்றால், நீங்கள் அந்த மாற்றத்தைச் செய்ய வேண்டியிருக்கும்.
ஏனென்றால் நீங்கள் தொடர்ந்து முன்னேற முடியாது. ஏனென்றால் நாங்கள் டார்கெட்டாக போதுமான ரன்கள் போடவில்லை. முன்பு போல இல்லை. அது இப்போது அவசியம், ஆட்டம் மாறிவிட்டது.
எப்போதும் 180-200 ரன்கள் அடிக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் நிலைமைகளை மதிப்பிட்டு, பின்னர் தேவையான ரன்களை வைக்க முயற்சி செய்யுங்கள்" என தெரிவித்துள்ளார்.