Tuesday, Jul 15, 2025

குறுக்கே வந்த பிராவோ... கோபத்தில் திட்டிய கேப்டன் தோனி - வைரல் வீடியோ

IPL2021 msdhoni CSKvsMI Bravo
By Petchi Avudaiappan 4 years ago
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

 மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி கேப்டன் தோனி சக வீரர் பிராவோவிடம் கோபமடையும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடரின் 2 ஆம் பாதி ஆட்டங்கள் கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல்நாள் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் மோதின.

இதில் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனிடையே இப்போட்டியில் அரைசதம் விளாசிய சவுரப் திவாரி 41 ரன்களில் இருந்த போது கொடுத்த கேட்சை தோனி கோட்டை விட்டார். பைன் லெக் திசையில் சென்ற அந்த பந்தை பிடிக்க போன தோனி தான் கேட்சிக்கு போகிறேன் என்று சொல்லிக் கொண்டே ஓடினார்.

அதேநேரம் அந்த திசையில் நின்ற பிராவோவும் கேட்ச் பிடிக்க வந்ததால் குழப்பம் ஏற்பட்டது. இதில் தோனி பந்தினை தவறவிட்டார்.

இதனால் கடும் விரக்தி அடைந்த தோனி பிராவோவின் மீது தனது கடுமையான கோபத்தை வெளிப்படுத்தி அவரிடம் ஏதோ பேசிய படியே திரும்பி வந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.