மாஸ் காட்டிய தோனியின் ரன் அவுட் : பஞ்சாப்- சென்னை போட்டியின் நினைவுகள்

MSDhoni IPL2022 TATAIPL CSK? CSKvsPBKS
By Petchi Avudaiappan Apr 03, 2022 06:35 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்த நிலையில் இப்போட்டி ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்தது எனலாம். 

இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணியில் லியாம் லிவிங்ஸ்டன் 60, ஷிகர் தவான் 33 ரன்கள் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது . சென்னை அணி தரப்பில் கிறிஸ் ஜோர்டான், பிரிட்டோரியஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதனை தொடர்ந்து 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய  சென்னை அணி 18 ஓவர்களில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ரன்கள் மட்டுமே எடுத்தது.  இதன்மூலம் பஞ்சாப் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இதனிடையே இப்போட்டியில் பஞ்சாப் அணி பேட்டிங்கின் போது சென்னை அணி வீரர் தோனி பனுகா ராஜபக்சேவை ரன் அவுட் மூலமாக அவுட் செய்தது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 

இதேபோல் சென்னை அணி வீரர் மொயீன் அலி ரன் ஏதும் எடுக்காமல் வைபவ் அரோரா பந்துவீச்சில் ஸ்டம்புகள் சிதற வெளியேறினார். மேலும் சென்னை அணி வீரர்கள் 3 பேர் ரன் ஏதும் எடுக்காமலும், 4 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 

தொடர்ந்து 3 போட்டிகளில் சென்னை அணி தோல்வியடைந்துள்ளது ரசிகர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.