தோல்வியில் முடிந்த காதல்...5 காதலிகளை பிரிந்த தல தோனி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி திருமணத்திற்கு முன்பு 5 பேரை காதலித்ததாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ஷாக்சியை திருமணம் செய்வதற்கு முன்பு தோனி பெண்களுடன் காதல் வசப்பட்டார். ஆனால் அவருடைய காதல் ஏதும் வெற்றியடையவில்லை.
முதல் காதல்
தோனி யார் யாரை காதலித்தார் என்பதை பார்ப்போம். தோனி முதலில் காதலித்த காதலியின் பெயர் பிரியங்கா ஜா. தோனி இந்திய அணிக்கு விளையாடுவதற்கு முன்பே பிரியங்கா ஜா என்ற பெண் மீது ஆசைப்பட்டுள்ளார்.
தோனியின் வாழ்க்கையில் முதன் முதலில் காதலித்த வந்த நிலையில், தோனி அதிர்ந்து போனார் அந்த செய்தி கேட்டு, பிரியங்கா ஜா ஒரு சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இதன் மூலம் தோனி தனது முதல் காதலியை இழந்தார்.
2வது காதல் தோல்வி
தோனி கடந்த 2007 ஆம் ஆண்டு தோனியின் காதலியாக இருந்தவர் பிரபல பாலிவுட் நடிகர் தீபிகா படுகோனே. ஓம் சாந்தி ஓம் திரைப்படத்தில் நடித்து புகழ் உச்சியில் இருந்த தீபிகா படுகோனே தோனியுடன் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சென்றார்.
தோனி ஆரம்ப கட்டத்தில் பெரிய அளவில் முடியை வளர்த்து வந்த நிலையில் அதை வெட்ட வைத்தவர் தீபிகா படுகோனே தான் என்ற தகவலும் வெளியானது.
ப்ரீத்தி உடன் காதல் தோல்வி
தோனியின் காதலிகள் லிஸ்டில் அடுத்ததாக இருந்தவர் ப்ரீத்தி என்ற பெண்மணி தற்போது நகைச்சுவை கலைஞர் கபில் சர்மாவின் காதலியாக ப்ரீத்தி இருகிறார்.
ப்ரீத்தியும் தோனியும் பலமுறை பல நிகழ்ச்சிகளுக்கு சென்று வந்திருக்கிறார்கள். இருவரும் தங்களது திருமணத்தை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏதோ ஒரு காரணத்திற்காக பிரிந்து சென்று விட்டார்கள்.
நடிகையுடன் காதல்
தோனி அடுத்ததாக காதலித்தது பிரபல தமிழ் நடிகை லட்சுமி ராய். 2009 ஆம் ஆண்டு தோனியை நீங்கள் லட்சுமி ராய் ராய் இல்லாமல் தோனியை தனியாக பார்க்க முடியாது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய காலத்தில் இருவரும் ஒன்றாகவே இருந்தார்கள். தோனியை திருமணம் செய்ய லட்சுமி ராய் ஓப்பனாகவே விருப்பம் தெரிவித்தார்.ஆனால் அது திருமணம் வரை செல்லவில்லை.
அசினுடன் காதல்
இந்தப் பட்டியலில் அடுத்து இருப்பவர் பிரபல நடிகை அசின். கஜினி திரைப்படம் மூலம் ஹிந்தியில் பிரபலமாக அசின் இருந்தார். இந்த நிலையில் அசினுக்கும் தோனிக்கும் காதல் மலர்ந்தது.
யாரிடமும் சிக்காத தோனி அசினிடம் சிக்கிவிட்டார் என ஊடகங்களும் செய்திகள் வெளியிட்டன. அசின் பெற்றோர் இருக்கும்போது தோனி அவர்களது வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்ததும் இதனை உறுதிப்படுத்தியது. ஆனால் எதிர்பாராத விதமாக இவர்களுடைய காதலும் பிரிந்தது.
இதனை அடுத்து தான் தாம் பத்தாம் வகுப்பு படிக்கும் போது அதே பள்ளியில் முதலாம் வகுப்பு படித்த சாக்ஸியை பிற்காலத்தில் தோனி சந்தித்து திருமணம் செய்து கொண்டார். காதல் தோல்வியில் முடிந்தால், மனம் தளராமல் தோனி போல் போராடுங்கள்.உங்களுக்கும் ஒரு ஷாக்சி கிடைப்பார்.