தோனியைப் பார்க்க நேரில் வந்த ரசிகருக்கு நேர்ந்த கதி
தோனியை பார்க்க ரசிகர் சுமார் 1400 கி.மீ தூரம் நடந்தே வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனிக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் விளம்பர பட ஷூட்டிங்கிற்காக சென்னை வந்த தோனி நடிகர் விஜய்யை சந்தித்து பேசிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
இதனைத் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாட தோனி தலைமையிலான சென்னை அணி ஐக்கிய அரபு அமீரகம் சென்றடைந்துள்ளது. இந்நிலையில் தோனியைக் காண ஹரியானாவின் ஜலான் கெடா கிராமத்தில் தொடங்கி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி வரை சுமார் 1400 கி.மீ ரசிகர் ஒருவர் நடைப்பயணம் செய்துள்ளார்.
முடிதிருத்தும் தொழிலை செய்து வரும் அந்த நபர் சிறுவயது முதலே தோனியின் தீவிர ரசிகராம். ஆனால் தோனி ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள நிலையில் திரும்பி வர 3 மாத காலம் ஆகும் என கூறப்படுகிறது.
அதுவரை பொறுத்திருந்து அவரை பார்த்துவிட்டு தான் ஊர் திரும்புவேன் என முரண்டு பிடித்த அந்த ரசிகருக்கு ராஞ்சி மக்கள் ஆறுதல் கூறி ஊர் திரும்ப விமான டிக்கெட் போட்டுக் கொடுத்து வழியனுப்பியுள்ளனர்.