டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக தோனி புதிய சாதனை - குவியும் வாழ்த்து
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இறுதி போட்டி மூலம் சென்னை அணி கேப்டன் மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் சீசனின் சாம்பியன் யார் என்பதை முடிவு செய்யும் இறுதிப் போட்டி இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடரஸ் அணிகள் மோதும் இப்போட்டி சென்னை அணி கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு 300வது போட்டியாக அமைந்துள்ளது.
இதன் மூலம் டி20 போட்டிகளில் அணியை அதிக முறை வழிநடத்திய கேப்டன்கள் பட்டியலில் தோனி முதலிடத்தில் உள்ளார். அவர் இந்திய அணிக்காக 72 போட்டிகளிலும், சென்னை அணிக்காக 213 போட்டிகளிலும், புனே அணிக்காக 14 போட்டிகளிலும் கேப்டனாக செயல்பட்டுள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் தோனி கேப்டனாக அணியை வழிநடத்தினால் 59.79 வெற்றி வாய்ப்பை உறுதி என கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனிடையே 300வது போட்டியில் விளையாடும் தோனிக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.