பாஸ் .. தலயோட ரிவ்யூ என்னைக்குமே தப்பா இருக்காது : ரிவ்யூ கேட்டு விக்கெட் எடுத்த தோனி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி துபாய் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடப்பு ஐபிஎல் சீசனின் 30-வது லீக் ஆட்டத்தில் விளையாடி வருகிறது. இந்த ஆட்டத்தில் மும்பை அணி 157 ரன்கள் வெற்றி இலக்காக உள்ளது
மும்பை அணியின் இன்னிங்ஸில் தீபக் சாஹர் வீசிய மூன்றாவது ஓவரின் இரண்டாவது பந்தில் டிகாக் பந்தை மிஸ் செய்ததால் அது அவர்களது பேடில் பட்டது. அதற்கு சென்னை அணி அப்பீல் செய்ய அம்பயர் ரிச்சர்ட் இல்லிங்வொர்த் நாட்-அவுட் கொடுத்தார்.
உடனடியாக சென்னை அணியின் கேப்டன் தோனி, அம்பயரின் முடிவுக்கு எதிராக ரிவ்யூ சென்றார். அது டிவி அம்பயர் ரிவ்யூவில் பந்து ஸ்டம்பில் பட்டது தெளிவானது. அதன் மூலம் சென்னை அணி முதல் விக்கெட்டை கைப்பற்றியது.
DO NOT MISS! ? ?
— IndianPremierLeague (@IPL) September 19, 2021
Dhoni Review System is BACK on the ?/?/ ? screens near you! ? ? #VIVOIPL #CSKvMI
Watch ? ?https://t.co/7K2wrtasWE
DRS சிஸ்டத்தை தோனி ரிவ்யூ சிஸ்டம் என ரசிகர்கள் சொல்வதுண்டு. மும்பை அணி இந்த ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. மும்பை வீரர் அன்மோல்ப்ரீத் சிங்கை க்ளீக் போல்ட் ஆக்கிய சிஎஸ்கே வீரர் தீபக் சாஹர். அதேபோல், அதிரடி ஆட்டக்காரர் சூர்ய குமார் யாதவ் விக்கெட்டை வீழ்த்தினார் ஷர்துல் தாக்கூர். மேலும், இஷான் கிஷன் விக்கெட்டை எடுத்தார் பிராவோ.
இந்த நிலையில் தோனி ரிவ்யூ சிஸ்டம் என்றும் தப்பாக இருக்காது என இணைய வாசிகள் புகழ்ந்து வருகின்றனர்.