டிசம்பர் மாதத்தோடு ஐபிஎல் போட்டியில் இருந்து தோனி ஓய்வு? - சோகத்தில் ரசிகர்கள்

MS Dhoni Chennai Super Kings IPL 2023
By Thahir May 24, 2023 05:19 AM GMT
Report

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இருந்து எப்போது ஓய்வு பெறப் போகிறீர்கள்? என்ற கேள்விக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி டிசம்பர் மாதத்தை மேற்கோள் காட்டி பேசிய நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி 

சேப்பாக்கத்தில் நேற்று இரவு நடந்த குஜராத் டைடன்ஸ் அணிக்கு எதிராக பிளே ஆஃப் போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.இந்த வெற்றியின் மூலம் 10-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது சிஎஸ்கே அணி. 

இதை தொடர்ந்து தோனி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ஓய்வு குறித்த கேள்வி தோனியிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்

டிசம்பர் மாதத்தில் இருந்து ஓய்வா?

"அடுத்த ஐபிஎல் சீசனில் விளையாடுவது குறித்து நான் நவம்பர் அல்லது டிசம்பரில் தான் முடிவெடுப்பேன். அதற்கு இன்னும் 8 முதல் 9 மாதங்கள் இருக்கின்றன.

Dhoni retired from IPL in December

அதனால் இப்போது அது குறித்து சொல்ல முடியாது. டிசம்பர் மாதம் மினி ஏலம் நடக்கும். அதற்கு முன்பாக முடிவெடுப்பேன். அந்தச் சமயத்தில் இருக்கும் உடல் தகுதியை வைத்து அடுத்த சீசனில் விளையாடலாமா வேண்டாமா என்பது குறித்து முடிவெடுப்பேன். அதற்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

இந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்து நான் அணியோடு பயிற்சி எடுத்து வருகிறேன். இதையெல்லாம் வைத்து தான் அடுத்த சீசன் குறித்து முடிவெடுக்க வேண்டும். இப்போது எதற்கு அந்த தலைவலியை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இன்றைய ஆட்டத்தை இன்னொரு இறுதிப் போட்டியாக நான் எடுத்துக்கொள்ளவில்லை. இந்த நாளுக்காக கடந்த இரு மாதங்களாக கடுமையாக உழைத்துள்ளோம்.

இந்த வெற்றியில் அனைவரின் பங்கும் இருக்கிறது. வாய்ப்புகளை அனைவரும் சரியாக பயன்படுத்திக்கொண்டனர்" என்றார்.