Viral Video...காலில் விழ கூடாது கைய கொடுங்க...வைரலாகும் "தல" எம்.எஸ். தோனி செயல்...!!
நேரில் சந்தித்த ரசிகை ஒருவர் தன் காலில் விழுவதை தடுத்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி அவருக்கு கை கொடுக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
எம்.எஸ்.தோனி
உலக கிரிக்கெட் அரங்கில் ஒரு கேப்டன் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற புது இலக்கணத்தை படைத்தது தனக்கான மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்திருப்பவர் மகேந்திர சிங் தோனி. இந்திய அணிக்காக இரண்டு உலககோப்பைகள், ஒரு ICC champions trophy, சென்னை அணிக்காக 5 IPL கோப்பைகளை வென்று கொடுத்துள்ள தோனி, தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று, தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகின்றார்.
அண்மையில், தமிழில் சாக்ஷி தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண், இவானா, நளினி, யோகி பாபு ஆகியோர் நடிப்பில் "LGM" என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. அது போல பல வெவ்வேறு தொழில்களில் தற்போது தோனி கவனம் செலுத்த துவங்கி இருக்கிறார்.
வைரல் வீடியோ
இந்நிலையில், அண்மையில் அவரை சந்தித்த ரசிகை ஒருவர் உணர்ச்சி பெருக்கில் அவரின் காலில் விழ முற்பட அதனை தடுத்த தோனி, அவருக்கு கை கொடுத்தது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
அண்மையில், நடிகர் ரஜினி உத்திர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை நேரில் சந்தித்த போது, அவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பலரும் அது குறித்து எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தான் தற்போது தோனியின் வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.
A fan touched MS Dhoni's feet upon meeting her idol.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) August 27, 2023
An icon - MS...!! pic.twitter.com/RPaqFZv8xm