சுயநலம் இல்லா வீரன் என்பதை மீண்டும் நீரூபித்த தல தோனி - ரசிகர்கள் நெகிழ்ச்சி
இந்திய கிரிக்கெட் அணியின் ஆலோசகராக செயல்படுவதற்கு தோனி ஒரு ரூபாய் கூட வேண்டாம் என கூறிய தகவலை பிசிசிஐ., செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி சமகால கிரிக்கெட் உலகின் வல்லரசாக திகழ்வதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்த தல தோனி, கேப்டன் பதவிகளில் இருந்து திடீரென விலகியதை போன்றே சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்தார்.
கடந்த ஆண்டு நடைபெற இருந்த டி.20 உலகக்கோப்பை தொடருடன் தான் தோனி ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் நடைபெற வேண்டிய டி.20 உலகக்கோப்பை தொடர் இந்த வருடத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டதால் தோனி திடீரென ஓய்வை அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.
தோனியின் இந்த திடீர் முடிவு அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இனி தோனியை இந்திய அணியின் நீள நிற ஜெர்சியில் பார்க்கவே முடியாது என ஏங்கிய ரசிகர்களுக்கு மிகப்பெரும் சர்பரைஸாக, டி.20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியை பிசிசிஐ., வெளியிட்டது.
இந்திய அணியின் ஆலோசகராக இருக்க தோனி கோரிக்கை வைக்காத போதிலும் தோனியை கவுரவிக்கும் விதமாக பிசிசிஐ., தானாக இந்த முடிவை எடுத்தது. தங்களது கோரிக்கையை ஏற்ற தோனிக்கு ஓபனாக நன்றியும் தெரிவித்திருந்தது. இந்தநிலையில், பிசிசிஐ., செயலாளரான ஜெய் ஷா தற்போது வெளியிட்டுள்ள ஒரு தகவலின்படி, இந்திய அணியின் ஆலோசகராக செயல்படுவதற்கு தோனி ஒரு ரூபாய் வாங்க மாட்டேன் என கூறிவிட்டது தெரியவந்துள்ளது.
ஜெய் ஷா வெளியிட்டுள்ள இந்த தகவல் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. தான் சுயநலம் இல்லாத வீரன் என்பதை மீண்டும் நிரூபித்துள்ள தோனியை அவரது ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். தோனி விளையாடுவதை பார்க்க முடியாவிட்டாலும் இந்திய அணியுடன் அவர் இருப்பதை மீண்டும் பார்க்க போகும் அந்த நாளுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் விமான நிலையம் அருகே குண்டு வெடிப்புகள்..! சிறிலங்கா எயார்லைன்ஸின் அவசர அறிவிப்பு IBC Tamil

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan
