ஜெய் ஸ்ரீ ராம் சர்ச்சை - "சென்னை ரசிகர்கள் அப்படி இல்லை"!! வைரலாகும் தல தோனி வீடியோ!!

MS Dhoni Cricket Tamil nadu
By Karthick Oct 16, 2023 05:38 AM GMT
Report

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்த ரசிகர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்டது பெரும் சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

ஜெய் ஸ்ரீ ராம் கோஷம்

கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்கள் ஜெய் ஸ்ரீ ராம் பாடலை பாடியதும், பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் அவுட்டாகி வெளியேறிய போது, ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட்டதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பலரும் இதனை எதிர்த்து கருத்துக்களை தெரிவித்து வரும் அதே நேரத்தில் இதற்கு ஆதரவாக கருத்துக்களும் பரப்பப்பட்டு வருகின்றது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் தொடர்பாக பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

வைரலாகும் தோனி வீடியோ

அந்த வீடியோவில், னக்கு 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது தொடங்கியது. கிரிக்கெட்டை எவ்வாறு அணுகவேண்டும் என்பதை தனக்கு தமிழகம் தான் சொல்லிக்கொடுத்தது என குறிப்பிடும் தோனி, சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடி போட்டிகளின் போது ரசிகர்கள் மிகச் சிறந்த ஆதரவை அளித்தார்கள் என்றார்.

எதிரி அணி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று பல இடத்தில் நினைக்க மாட்டார்கள் என குறிப்பிட்டு, ஆனால் சென்னை மக்கள் அப்படி அல்ல என்றும் கிரிக்கெட் விளையாட்டை புரிந்து கொண்டு பாராட்டக்கூடிய ரசிகர்களாகத்தான் இங்கு இருக்கிறார்கள் என்று தோனி அந்த வீடியோவில் பேசினார்.

முன்னதாக 1999-ஆம் ஆண்டு இந்திய அணியை பாகிஸ்தான் சென்னை சேப்பாக்க மைதானத்தில் 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த போது, மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்கள் பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு பாராட்டுகளை தெரிவிக்கும் வகையில் கை தட்டி அந்நாட்டு வீரர்களுக்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்த வீடியோவும் நேற்று முதல் சமூகவலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.