பொம்மன், பெள்ளியை நேரில் அழைத்து கிப்ட் கொடுத்த எம்.எஸ்.தோனி..!

MS Dhoni Chennai Super Kings
By Thahir May 10, 2023 10:45 AM GMT
Report

ஆஸ்கர் விருது பெற்ற பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதியினரை நேரில் அழைத்து நம்பர் 7 மற்றும் அதில் பொம்மன் பெயர் பொறிக்கப்பட்ட டீ சர்ட் ஒன்றை வழங்கியுள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி.

ஆஸ்கர் விருது பெற்ற பொம்மன் - பெள்ளி 

தி எலிஃபண்ட் விஸ்ஃபரர்ஸ் படத்தின் இயக்குநர் கார்த்திகி, அப்படத்தில் யானை பராமரிப்பாளர்களாக வரும் பொம்மன், பெள்ளி தம்பதியினர் நடித்து இருந்த நிலையில், இருவருக்கும் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

இதையடுத்து சமீபத்தில் தமிழ்நாடு வந்த பிரதமர் நரேந்திர மோடி தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு சென்று இருவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

dhoni-personally-called-bomman-belli

இந்த நிலையில், சென்னையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி,

டி - சர்ட் கொடுத்த தோனி 

பொம்மன் - பெள்ளி தம்பதியை இன்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது அவர்களுடன் படத்தின் இயக்குநர் கார்த்திகியும் உடன் இருந்தார்.

dhoni-personally-called-bomman-belli

இவர்கள் மூவரையும் பாராட்டிய தோனி, அவர்களுக்கு 7-ஆம் எண் கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சீருடையை பரிசாக வழங்கினார்.