தோனி ரூ.10 லட்சம் செலுத்த வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

MS Dhoni Madras High Court
By Sivaraj Feb 12, 2026 12:46 PM GMT
Report

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எம்.எஸ்.தோனி மானநஷ்ட ஈடு வழக்கில் ரூ.10 லட்சம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

எம்.எஸ்.தோனி வழக்கு

ஐபிஎல் சூதாட்ட வழக்கு தொடர்பான விவாதத்தில், தனக்கு எதிராக அவதூறு கருத்துக்கள் கூறியதாக, ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் மற்றும் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் மீது கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி குற்றம்சாட்டினார். 

M.S.Dhoni

மேலும், அவர்களுக்கு எதிராக 2014ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மானநஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்தார்.

அவர் தனது மனுவில் ரூ.100 கோடி மானநஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

10 ஆண்டுகளுக்கும் மேலாக

இந்த வழக்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணையில் உள்ளது. இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது.

அப்போது விவாத நிகழ்ச்சியின் பதிவை எழுத்து வடிவுக்கு மாற்றுவதற்கு கட்டணமாக ரூ.10 லட்சம் செலுத்த, எம்.எஸ்.தோனி தரப்பிற்கு நீதிபத்தி உத்தரவிட்டார்.

அத்துடன் வழக்கின் அடுத்த விசாரணையை மார்ச் 12ஆம் திகதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Madras High Court order dhoni pay 10 lakhs