தோனி ஓய்வு பெறுகிறாரா? முதல் முறையாக மைதானத்திற்கு வந்த பெற்றோர்கள்
ஐபிஎல் தொடரின் 17வது லீக் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
CSK vs DC
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி அணிகள் விளையாடி வருகிறது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த டெல்லி அணி, 20 ஓவர் முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு, 183 ரன்கள் குவித்தது. டெல்லி அணி சார்பில், அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் 77 ரன்கள் குவித்தார்.
183 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி, 12 ஓவர் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 80 ரன்கள் மட்டுமே குவித்து தடுமாறி வருகிறது.
இந்நிலையில், இந்த போட்டியுடன் தோனி ஓய்வை அறிவிக்க உள்ளாரா என்ற விவாதம் சமூகவலைத்தளத்தில் எழுந்துள்ளது.
தோனி ஓய்வா?
இந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி பேட்டிங்கில் தடுமாறி வரும் நிலையில், இது குறித்த கருத்து தெரிவித்த சென்னை அணியின் பயிற்சியாளர் பிளெமிங், "தோனியின் உடல்நிலை முன்பு போல் இல்லை. அவரால் தொடர்ந்து 10 ஓவர்கள் விளையாட முடியாது" என கூறினார்.
வழக்கமாக தோனி விளையாடுவதை நேரில் வந்து பார்க்க, அவரின் மனைவி சாக்ஷி மற்றும் மகள் ஜிவா மைதானத்திற்கு வருவார்கள்.
இன்றைய போட்டியை நேரில் பார்க்க, முதல்முறையாக தோனியின் பெற்றோர்கள் பான்சிங் தோனி மற்றும் தாய் தேவகி தேவி மைதானத்திற்கு வருகை தந்துள்ளனர்.
இதுவரை ஒரு முறை கூட அவரது பெற்றோர்கள் மைதானத்திற்கு வந்ததில்லை என்பதால், இந்த போட்டியில் ரசிகர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில், தோனி ஓய்வை அறிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
Home sweet Anbuden ft. The Dhonis! 🏠🏟️#CSKvDC #WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/Bj1rnt1nCw
— Chennai Super Kings (@ChennaiIPL) April 5, 2025
இது தொடர்பான அதிகாரபூர்வ தகவல் வராத நிலையிலும், இந்த தகவல் ரசிகர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.