சத்தமில்லாமல் தோனி செய்த சாதனை - இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்
ஐபிஎல் தொடரில் சென்னை அணி சார்பில் கேப்டன் மகேந்திர சிங் தோனி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
ஷார்ஜாவில் நேற்று முன்தினம் நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 44வது லீக் ஆட்டத்தி்ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தியது. இந்தப் போட்டியின் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் அணியாக சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது.
இந்தப் போட்டியில் சென்னை அணியின் கேப்டனும்,விக்கெட் கீப்பருமான தோனி விருதிமான் சாஹா, ஜேஸன் ராய், பிரியம் கார்க் ஆகியோரின் கேட்ச்களைப் பிடித்து அசத்தினார்.
இதன் மூலம் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விக்கெட் கீப்பராக இருந்து 100 கேட்ச்களை தோனி பிடித்து சாதனைப் படைத்துள்ளார். அதே சமயம் ஐபிஎல் தொடரில் அதிகமான கேட்ச் பிடித்த வீரர்களில் சென்னை வீரர் சுரேஷ் ரெய்னா 98 கேட்சுகளையும், மும்பை இந்தியன்ஸ் வீரர் கெய்ரன் பொலார்ட் 94 கேட்சுகளையும் பிடித்து முதலிரண்டு இடங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.