துபாய் புறப்பட்டது தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி
ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்தமாதம் தொடங்க இருக்கும் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து துபாய் புறப்பட்டது கேப்டன் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 15-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
இதனால் சிஎஸ்கே அணி வீரர்கள் சிலர் தோனியுடன் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற விளம்பரப் படப்பிடிப்பில் கலந்துக்கொண்ட தோனி, அதே படப்பிடிப்பு தளத்தில் இருந்த நடிகர் விஜயை சந்தித்து பேசி புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்.
இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று துபாய் புறப்பட்டுச் சென்றனர்.
கொரோனா தடுப்பு முறைகள் ஆகியவை பின்பற்றப்பட இருப்பதால் அமீரகத்துக்கு முன்னதாகவே புறப்பட்டு பயிற்சியை தொடங்க இருக்கிறது சிஎஸ்கே அணி.
அமீரகத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி அன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இன்டியன்ஸ் அணிகள் மோத உள்ளன.
இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளின் அடிப்படையில் புள்ளிப் பட்டியலில் டெல்லி, சென்னை, பெங்களூரு மற்றும் மும்பை அணிகள் டாப் நான்கு இடங்களை பிடித்துள்ளன.
✈️ Mode ON#UrsAnbudenEverywhere#WhistlePodu #Yellove ?? pic.twitter.com/yHE4c2Qk4X
— Chennai Super Kings - Mask P?du Whistle P?du! (@ChennaiIPL) August 13, 2021