ஐக்கிய அரபு அமீரகம் சென்றடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!
dhoni
dubai
arrive
csk team
By Anupriyamkumaresan
தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் ஐபிஎல் 2021 சீசனின் எஞ்சியுள்ள ஆட்டத்தில் விளையாடுவதற்காக ஐக்கிய அரபு அமீரகம் சென்றடைந்துள்ளனர்.
சென்னையிலிருந்து பிற்பகல் புறப்பட்ட அவர்கள் அமீரகம் சென்றடைந்த செய்தியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பகிர்ந்துள்ளது. தோனி, ரெய்னா, உத்தப்பா, ருதுராஜ் கெய்க்வாட், தீபக் சாஹர் மாதிரியான வீரர்கள் தற்போது அமீரகத்தில் முகாமிட்டுள்ளனர்.
அடுத்தடுத்த நாட்களில் அணியின் மற்ற வீரர்களும் அணியினருடன் இணைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பை இன்டியன்ஸ் அணிக்கு எதிராக வரும் செப்டம்பர் 19-ஆம் தேதியன்று சென்னை அணி மோத உள்ளது.

Food recipe: உளுந்து சாதத்திற்கு எள்ளு துவையல்- இதுவரையில் யாரும் செய்யாத பக்குவத்தில் செய்ய தெரியுமா? Manithan
