தல PM தளபதி CM மதுரை ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு!
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வரும் விஜய் படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் இடத்தின் அருகே, ஒரு விளம்பர படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்றுள்ளது. அந்த விளம்பர படத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்நாள் கேப்டனுமான (தல) மகேந்திர சிங் தோனி நடித்துள்ளார்.
இரண்டு படப்பிடிப்புகளும் அருகருகே நடைபெற்றதால், பீஸ்ட் படத்தின் தளத்திற்கு தோனி வந்து நடிகர் விஜயை சந்தித்தார். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது இந்த நிலையில் எப்போது வித்யாசமாக யோசிக்கும் மதுரை ரசிகர்கள்.தோனி மற்றும் விஜய் புகைப்படங்கள் வெளியான சில மணி நேரத்திற்குள் மதுரை விஜய் வடக்கு மாவட்ட மாநகர் இளைஞரணி ரசிகர்கள் ஒட்டியுள்ள அதிரடி போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

அதில், தோனி விஜய் அருகருகே இருக்கும் படத்தை வைத்து, தோனி படத்தின் அருகே "PM" என்றும், விஜய் படத்தின் அருகே "CM" என்றும், "ஆளப்போகும் மன்னர்கள்" எனவும் குறிப்பிட்டு உள்ளனர்.
விஜயை அரசியலுக்கு இழுக்கும் நோக்கில் மதுரை ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டி அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கமான ஒன்றுதான் ஆனால், தற்போது (தல)தோனியினை ''PM'' என இணைத்திருப்பதால் போஸ்டர் இணையத்தில் வைரலாக துவங்கியுள்ளது.