தோனி வேதனை; நான் செய்த தவறு தான் தோல்விக்கு காரணம்..!
குஜராத் டைட்டான்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படு தோல்வி அடைந்தது.
இந்த ஆண்டின் 15வது ஐபிஎல் தொடரின் 62வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்,குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.
மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து களம் இறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ருத்துராஜ் கெய்க்வாட் 23 ரன்களும்,ஜெகதீசன் 39 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய குஜராத் அணி 19.1 ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த தோல்வி குறித்து பேசிய சென்னை அணி கேப்டன் தோனி,டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது தவறாக அமைந்துவிட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து பேசிய தோனி,முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது தவறாக அமைந்துவிட்டது. முதல் பாதியில் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது மிகுந்த சவாலாக இருந்தது.
குஜராத் அணியின் சாய் கிஷோர் மிடில் ஓவர்களில் மிக சிறப்பாக பந்துவீசினார். ஜெகதீசனுடன் கூட்டணி சேர்ந்து மிடில் ஓவர்களை எதிர்கொள்வதற்காகவே சிவம் துபேவை எனக்கு முன்பாக களமிறக்கினோம்.
இளம் வீரரான பத்திரான மிக சிறப்பாக slower பந்துகள் வீசுகிறார், இருந்தாலும் அவர் தனது சில தவறுகளை திருத்தி கொண்டால் அவரது பந்துவீச்சை எதிர்கொள்வது அனைவருக்கும் பெரும் சவாலாக இருக்கும்” என்று தெரிவித்தார்.