மீண்டும் இந்திய அணியில் தோனி : பிசிசிஐ புதிய திட்டம் - ரசிகர்கள் உற்சாகம்
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை மீண்டும் இந்திய அணியில் சேர்க்க பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மீண்டும் தோனி
இந்திய அணியின் பயிற்ச்சியாளராக ராகுல் டிராவிட் மூன்று விதமான கிரிக்கெட் அணியிலும் பயிற்சியாளராக இருந்து வருவதால் அவரது பணி சுமை அதிகமாக உள்ளதாக பிசிசிஐ கருதுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிசிசிஐ தகவல்
ஐசிசி போட்டிகளில் தந்த பிராண்ட் கிரிக்கெட்டுக்கான திறனைக் கொண்டு வர, டி20 அணியில் தோனியை இயக்குனராக சேர்ப்பது குறித்து பிசிசிஐ-யில் பேசப்பட்டு வருகிறது .
கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் ஆலோசகராக தோனி செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.அதன் அடிப்படையில், எம்.எஸ். தோனியை டி20 வடிவத்தில் மட்டும் இயக்குனராக ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மீண்டும் இந்திய அணியில் தோனி வர உள்ளதால் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.