ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றிய தோனி - மகிழ்ச்சியில் மனைவி சாக்‌ஷி செய்த செயல்

dhoni CSKvsSRH whistlepodu
By Petchi Avudaiappan Sep 30, 2021 06:59 PM GMT
Report

ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்கெதிரான ஆட்டத்தில் கேப்டன் தோனி தனது ஸ்டைலில் சென்னை அணியை வெற்றி பெற வைத்ததை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

ஐபிஎல் டி20 தொடரின் நேற்று நடந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த  134 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனையடுத்து 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணி சிறப்பான தொடக்கம் கண்டது. ஆனால் திடீரென அந்த அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் போட்டியில் வெற்றி யாருக்கு என்ற எதிர்பார்ப்பு நிலவியது. 

இதனிடையே சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி ஒரு ஓவரில் 3 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. கேப்டன் தோனியும், அம்பத்தி ராயுடுவும் களத்தில் இருந்தனர். இதில் ஓவரின்  4வது பந்தை எதிர்கொண்ட தோனி தனது ஸ்டைலில் சிக்ஸர் அடித்து சென்னை அணிக்கு வெற்றியை பெற்று கொடுத்தார். இந்த ஒரு ஷாட்டின் மூலம் தங்களது பழைய தோனியை மீண்டும் பார்த்துவிட்டதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர். 

இதனை தோனியின் மனைவி துள்ளிக்குதித்தும், மகள் ஷிவா தோனி கைத்தட்டியும் கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.