தோல்விக்கு இந்த 2 பேர் தான் காரணம் - வேதனையில் கண்கலங்கிய தோனி!

MS Dhoni Rajasthan Royals Chennai Super Kings feels
By Anupriyamkumaresan Oct 04, 2021 03:56 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in கிரிக்கெட்
Report

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் முதல் 6 ஓவர்களிலேயே போட்டி சென்னை அணியின் கையை விட்டு சென்றுவிட்டதாக தோனி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் டி.20 தொடரின் நேற்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

தோல்விக்கு இந்த 2 பேர் தான் காரணம் - வேதனையில் கண்கலங்கிய தோனி! | Dhoni Feels For Loss Yesterdays Match

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயூடு போன்ற சீனியர் வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், அனைத்து போட்டிகளிலும் மிக சிறப்பாக விளையாடி வரும் துவக்க வீரர் ருத்துராஜ் கெய்க்வாட், இன்றைய போட்டியில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதி வரை ஆட்டமும் இழக்காமல் 60 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 189 ரன்கள் எடுத்தது.

இதன்பின் 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடின இலக்கை துரத்தி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, முதல் ஓவரில் இருந்தே சென்னை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தது.

இந்தநிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி, முதல் 6 ஓவரிலேயே போட்டி சென்னை அணியின் கையை விட்டு சென்றுவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்.

தோல்விக்கு இந்த 2 பேர் தான் காரணம் - வேதனையில் கண்கலங்கிய தோனி! | Dhoni Feels For Loss Yesterdays Match

மேலும், டாஸை இழந்தது மோசமாக அமைந்துவிட்டது. 190 ரன்கள் என்பது வெற்றிக்கு போதுமான இலக்கு தான். ஆனால் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது, இதை ராஜஸ்தான் வீரர்கள் சரியாக பயன்படுத்தி கொண்டு எங்கள் பந்துவீச்சாளர்களுக்கு அதிக நெருக்கடியை கொடுத்துவிட்டனர்.

முதல் 6 ஓவரிலேயே போட்டியை ராஜஸ்தான் அணி மாற்றிவிட்டது. ருத்துராஜ் கெய்க்வாட் மிகசிறந்த வீரர். இந்த போட்டியில் தோல்வியடைந்துள்ளதால் ருத்துராஜ் கெய்க்வாட் அடித்த சதம் அவ்வளவாக பேசப்படாது, ஆனால் அவரது ஆட்டம் மிக சிறப்பாக இருந்தது. ராஜஸ்தான் வீரர்கள் ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றவாறு விளையாடினர்.

தோல்விக்கு இந்த 2 பேர் தான் காரணம் - வேதனையில் கண்கலங்கிய தோனி! | Dhoni Feels For Loss Yesterdays Match

தீபக் சாஹர் இந்த போட்டியில் விளையாடாததும் எங்களுக்கு சற்று பின்னடைவை கொடுத்துவிட்டது. இந்த தோல்வியை மறந்துவிட்டு இந்த தோல்வியின் மூலம் கிடைத்துள்ள பாடத்தில் இருந்து சில விசயங்களை மாற்றி கொள்வோம்” என்று தெரிவித்துள்ளார்.