தோல்விக்கு இது தான் முக்கிய காரணம் - வேதனையில் புலம்பும் தோனி
ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் டெல்லி அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழப்புக்கு 136 ரன்கள் எடுத்தது.பின்னர் களமிறங்கிய டெல்லி அணி 19.4 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
கடைசி நேரத்தில் ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூரின் சிறப்பான பந்துவீச்சால் டெல்லி அணி தடுமாறிப்போனது. இதனால் சென்னை அணி வெற்றி பெறும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் டெல்லி அணியுடனான இந்த தோல்வி குறித்து சென்னை அணி கேப்டன் தோனி விளக்கமளித்துள்ளார்.
அதாவது தீபக் சாஹர் தனது ஒரே ஓவரில் 21 ரன்கள் கொடுத்ததே போட்டியில் திருப்புமுனையாக அமைந்துவிட்டதாகவும், முதல் 6 ஓவர்களில் அதிகமான ரன்களை விட்டு கொடுக்காமல் இருப்பதே முக்கியம். அதனை நாங்கள் செய்ய தவறி விட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.