'சென்னை அணியின் கேப்டன் எப்பவும் தோனிதான் - சிஎஸ்கே அற்விப்பு
10 அணிகள் பங்கேற்கும் 16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரலில் தொடங்கி இரண்டரை மாதங்கள் நடக்க இருக்கிறது. இதற்கான வீரர்களின் மினி ஏலம் அடுத்த மாதம் 23-ந்தேதி கொச்சியில் நடக்க உள்ளது.
தோனிதான் கேப்டன்
சென்னை அணியின் கேப்டனாக டோனி நீடிப்பார் என்று சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன் கூறினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன் கூறும் போது, வீரர்களை விடுவித்தது கடினமான முடிவு.
தோனி வழிநடத்துவார்
சென்னை அணிக்காக அவர்கள் அளித்த பங்களிப்பு எப்போதும் நினைவில் இருக்கும். அவர்களில் யாரையாவது ஏலத்தில் மீண்டும் எடுக்க வாய்ப்பு கிடைத்தால் அதை செய்வோம்.
2023-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் சென்னை அணியை டோனி வழிநடத்துவார். அவர் தனது மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார். அணியும் நன்றாக செயல்படும்' என்றும் கூறினார்.