என்றென்றும் அழியா புகழ்பெற்ற CSK-வின் தல தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து - ஸ்டாலின் டுவீட்!

MS Dhoni M K Stalin
By Vinothini Jul 07, 2023 05:04 AM GMT
Report

கிரிக்கெட் வீரரான எம்.எஸ். தோனிக்கு தமிழக முதலமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தோனி

இந்திய கிரிக்கெட் வீரரான M.S.தோனி இன்று தனது 42 வயதை எட்டியுள்ளார். இவர் 2007-ல் டி20 உலகக்கோப்பை, 2011-ல் 50 ஓவர் உலகக்கோப்பை, 2013-ல் சாம்பியன்ஸ் டிராபி என்று அனைத்து ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் தோனி தான்.

dhoni-birthday-special-cm-tweet

இவர் இந்திய அணியின் கேப்டனாக இருந்த காலத்தை தான் பொற்காலம் என்று கூறப்படுகிறது. மேலும், சென்னை அணியின் கேப்டனான இவரை மக்கள் கொண்டாடி வருகின்றனர். இவரை மஞ்சள் வீரர் என்றும், தல என்றும் ரசிகர்கள் அழைப்பர். இவர் தனது 41-வது வயதிலும் ஐபிஎல் கோப்பையை சென்னை அணிக்காக வென்றார். இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் இவரது ரசிகர்கள் கூட்டம் குறையவில்லை, இன்னும் கொண்டாடி வருகின்றனர்.

முதலமைச்சர் வாழ்த்து

இந்நிலையில், இன்று இவரது பிறந்தநாளையொட்டி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஐதராபாத்தில் டோனிக்கு 52 அடியில் முழு நீல கட் அவுட் வைத்து கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர். சமூக வலைத்தளங்களில் பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இவரது பிறந்தநாளை கொண்டாடியும் வாழ்த்து தெரிவித்தும் வருகின்றனர்.

dhoni-birthday-special-cm-tweet

இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்ருக்கு வாழ்த்து தெரிவித்து டுவீட் போட்டுள்ளார். அதில் அவர், "இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் #CSK-வின் தல தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


உங்கள் சாதனைகள் மற்றும் உங்கள் பணிவான தொடக்கம் இந்தியா முழுவதும் உள்ள எண்ணற்ற இளைஞர்களின் வாழ்க்கையில், குறிப்பாக சாதாரண பின்னணியில் உள்ளவர்களின் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நீங்கள் தொடர்ந்து பிரகாசிக்கவும், உங்கள் ஒப்பற்ற தலைமைப் பண்புகள் அனைவரையும் ஊக்குவிக்கவும்" என்று பதிவிட்டுள்ளார்.