கிரிக்கெட் அவருக்கு தொழில் கிடையது அது அவரோட காதல் : தோனியின் செயலை மெச்சும் பிசிசிஐ

dhoni bcci t20worldcup
By Irumporai Oct 12, 2021 07:17 PM GMT
Report

உலகக்கோப்பை அணிக்கு இந்திய அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள தோனி அதற்காக சம்பளம் ஏதும் பெறவில்லை என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்திய முன்னாள் கேப்டன் தோனி அனைத்து விதமான கோப்பைகளையும் இந்திய அணிக்காக பெற்றுத் தந்து கிரிக்கெட் உலகில் தனிப்பெரும் ஜாம்பவானாக வலம் வந்தார்.

இந்தநிலையில், ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காத விதமாக கடந்தாண்டு ஆகஸ்ட் 15ம் தேதி கிரிக்கெட்டில் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்தார்.

அதன்பின் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பங்கேற்ற அவர் வழக்கம் போல் சென்னை அணியை வழிநடத்தி வருகிறார்.

இந்த நிலையில், தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் தோனியில் தலைமையிலான அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்த நிலையில்,  டி20 உலகக்கோப்பையானது வரும் 17ம் தேதி தொடங்க உள்ளது.இதில், இந்திய அணிக்கான ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் பிசிசிஐ அறிவித்தது.

இதை வரவேற்கும் விதமாக தோனி ரசிகர்கள் #Dhoni என்ற ஹேஸ் டேக்கை ட்விட்டரில் ட்ரெண்டான நிலையில், ஆலோசகர் பணிக்கு தோனி சம்பளம் ஏதும் பெறவில்லை என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.