நடுவர்களிடம் வாக்குவாதம்...ஐபிஎல் Final-ல் போட்டியில் தோனிக்கு தடை?
ஐபிஎல் போட்டியின் .ஃபைனலில் தோனி விளையாட தடை செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மிரட்டல் வெற்றி பெற்ற சென்னை அணி
ஐபிஎல் 2023 ஆண்டு தொடரின் ப்ளே ஆப் சுற்று போட்டிகள் கடந்த மே 23 முதல் துவங்கிய நிலையில், புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடம் பிடித்திருந்த குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் குவாலிபயர் போட்டியில் விளையாடின.
டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த குஜராத் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
முதலில் பேட்டிங்களில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்தது.
குஜராத் டைட்டன்ஸ் சார்பில் முகமது சமி மற்றும் மோஹித் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
173 ரன்கள் இலக்குடன் களம் இறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 10வது முறையாக ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
நடுவர்களுடன் தோனி வாக்குவாதம்?
இந்த போட்டியின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
சென்னை - குஜராத் அணியின் ஆட்டத்தின் போது பேட்டியின் நடுவே பந்து வீச்சாளர் பத்திரனா சில நிமிடங்கள் மைதானத்தை விட்டு வெளியேறியுள்ளார்.
ஐபிஎல் போட்டிகளின் விதிமுறைகளின் படி மைதானத்தில் இருந்து போட்டியாளர் ஒருவர் வெளியேறினால் 9 நிமிடங்களுக்கு பின்னரே பந்து வீச அனுமதிக்கப்படுவர்.
இதனிடையே பத்திரனா மைதானத்தில் இருந்து வெளியேறி 4 நிமிடங்களில் மீண்டும் மைதானத்திற்கு திரும்பி பந்து வீசினார்.
தோனிக்கு தடையா?
அப்போது குறுக்கிட்ட நடுவர்கள் இன்னும் 5 நிமிடங்கள் உள்ள நிலையில் பந்து வீச அனுமதிக்க நடுவர்கள் மறுத்ததாக சொல்லப்படுகிறது.
இதனால் தோனி நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிசிசிஐயின் விதியின் படி நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டால் அடுத்த போட்டியின் போது விளையாட அனுமதி மறுக்கப்படலாம் என்று கூறப்படும் தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.