எனக்கு அது வேணும்! ரசிகரிடம் அந்த பொருளை கேட்டு வாங்கிய தோனி - கியூட் வீடியோ வைரல்!
எம்எஸ் தோனி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமாவார் மகேந்திர சிங் தோனி.
அண்மையில் இவர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் அல்காரஸ் மற்றும் அலெக்சாண்டர் சுவரேவ் மோதிய காலிறுதி ஆட்டத்தை நேரில் சென்று கண்டு களித்தார்.
மேலும் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், தோனியை தன்னுடன் கோல்ப் விளையாட அழைப்பு விடுத்தார். இதனை தொடர்ந்து இருவரும் கோல்ப் விளையாடும் புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது.
ரசிகரிடம் கேட்டு வாங்கிய தோனி
இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் தோனி, தனது ரசிகர் ஒருவரிடம் பொருள் ஒன்றை திருப்பி கொடுங்கள் என்று கேட்டு வாங்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் தோனியை ரசிகர்கள் சாலையில் சந்தித்தனர்.
அப்போது பெண் ரசிகை ஒருவர் தோனிக்கு சாக்லேட்டும், பூங்கொத்தும் அன்பளிப்பாக வழங்கினார். பிறகு அந்த ரசிகையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதனை தொடர்ந்து ஆன் ரசிகர் ஒருவர் தோனியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு, ஆட்டோகிராஃப்பும் கேட்டார்.
அப்போது ஆட்டோகிராஃப் போட்டுக்கொடுப்பதற்கு முன்னதாக தோனி தன் கையில் வைத்திருந்த சாக்லேட்டை இடைஞ்சலாக இருப்பதால் ரசிகரிடம் கொடுத்திருந்தார்.
பின்னர் ஆட்டோகிராஃப் போட்டுக்கொடுத்தற்கு பின்னர் "என்னுடைய சாக்லெட்டை திருப்பி கொடுங்கள்" என்று கியூட்டாக ரசிகரிடம் கேட்டு தோனி பெற்றார். இதனை கேட்டவுடன் அங்கிருந்த ரசிகர்கள் சிரித்து மகிழ்ந்தனர். இந்த வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களை அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.
Latest video of #MSDhoni from US #Viralvideo pic.twitter.com/VqPS4fMWsd
— Akshara (@Akshara117) September 11, 2023