60 வயதுவரை விளையாடுங்கள்: நடிகர் சிவகார்த்திகேயனின் கேள்விக்கு தோனி கொடுத்த பதில்
நடிகர் சிவகார்த்திகேயனின் கேள்விக்கு எம்.எஸ்.தோனி பதில் அளித்தது கிரிக்கெட் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
முன்னாள் வீரர்களுடன் தோனி
Roar 2026 என்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய வீரர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்தது.

இதில் மேத்யூ ஹைடன், சுரேஷ் ரெய்னா, பிராவோ உள்ளிட்ட பல முன்னாள் வீரர்கள் கலந்துகொண்டனர். அவர்களுடன் எம்.எஸ்.தோனியும் பங்கேற்க நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்துகொண்டார்.
மேடையில் அவர் தோனியை புகழ்ந்து பேசியதுடன் சில கேள்விகளையும் கேட்டார். 'உங்களிடம் ஒருமுறை ஓய்வு பெறப்போகிறீர்களா? எனக் கேட்டபோது "கண்டிப்பாக இல்லை" என்று கூறினீர்கள்.
60 வயது வரை
ஒவ்வொரு ஆண்டும் உங்களிடம் இருந்து இந்த பதில் மட்டும் வர வேண்டும் என எதிர்பார்க்கிறோம். 60 வயது வரை ஐபிஎல் விளையாடுங்கள் என்று சிவகார்த்திகேயன் கூறினார்.

அதற்கு பதில் அளித்த தோனி, "ஒவ்வொரு நாளும் என் உடல் தகுதி குறைந்துகொண்டே வருகிறது. ஆனாலும், நான் முயற்சி செய்கிறேன்" என்றார்.
அவரது இந்த பதில் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்த மைதானமே ஆர்ப்பரித்தது. இதுதொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகியுள்ளது.
