மறக்குமா நெஞ்சம் : தோனி, ரெய்னா ஓய்வினை அறிவித்த தினம் இன்று

MS Dhoni Suresh Raina
By Irumporai Aug 15, 2022 06:32 AM GMT
Report

இதே சுதந்திர தின நாளில் தான், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களாக விளங்கிய எம்.எஸ்.தோனியும், சுரேஷ் ரெய்னாவும் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றனர்.

தோனி

2004ம் ஆண்டு முதல் முதலாக வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் அறிமுகமானார் மகேந்திர சிங் தோனி. பேட்டிங்கில் பந்துவீச்சாளர்களை திணறடித்த தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் இந்திய ரசிகர்களை அவர் வசப்படுத்தியது.

மறக்குமா நெஞ்சம்  : தோனி, ரெய்னா ஓய்வினை அறிவித்த தினம் இன்று | Dhoni And Raina Announced His Retirement

இதேபோல் 2005ம் ஆண்டு ஜூலை 30ம் தேதி இலங்கைக்கு எதிராக போட்டியில் முதல் முறையாக இந்திய அணிக்காக களமிறங்கினார் சுரேஷ் ரெய்னா. பேட்டிங் மட்டுமின்றி பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கிலும் கைதேர்ந்தவர் சுரேஷ் ரெய்னா. இந்திய அணிக்காக பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

ரெய்னா

ஐபிஎல் போட்டியில் அதிகளவிலான ரன்களை குவித்துள்ள ரெய்னா மிஸ்டர் ஐபிஎல் என்றும் அழைக்கப்பட்டார். இந்நிலையில் யாரும் எதிர்பாராத நேரத்தில் கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 15 தேதி தோனி மற்றும் ரெய்னா இருவரும் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.

மறக்குமா நெஞ்சம்  : தோனி, ரெய்னா ஓய்வினை அறிவித்த தினம் இன்று | Dhoni And Raina Announced His Retirement

இதனை சற்றும் எதிர்ப்பார்க்காத ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர். இருப்பினும் இருவரும் ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வந்ததால் ரசிகர்கள் சற்று மன நிம்மதி அடைந்தனர். ரெய்னா சென்னை அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட நிலையில், தோனி தொடர்ந்து விளையாடி வருகிறார்