வீல் சேரில் செல்லும் விஜய் டிவி டிடி - காரணத்தைக் கேட்ட ரசிகர்கள் சோகம்
நடிகையும் , தொகுப்பாளினியுமான டிடி வீல் சேரில் இருக்கும்படியான புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளராக இருப்பவர் டிடி என்று அழைக்கப்படும் திவ்யதர்ஷினி. இவருக்கு சின்னத்திரையில் ஏராளமான ரசிகர்கள் உள்ள நிலையில் காபி வித் டிடி, ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
இதனிடையே தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வரும் டிடி துருவ நட்சத்திரம், ஜோஸ்வா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் நீண்ட் நாட்களுக்குப் பின் அவர் ஆர்ஆர்ஆர் பட புரொமோஷன் நிகழ்ச்சியை விஜய் டிவி-யில் தொகுத்து வழங்கினார்.
இந்நிலையில் டிடி வீல் சேரில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. இதனைப் பார்த்த ரசிகர்கள் டிடி-க்கு என்ன ஆச்சு? என்று கேள்வி எழுப்பினர். ஃபோட்டோ குறித்து குறிப்பிட்டிருந்த டிடி, தனக்கு முடக்கு வாதம் இருப்பதால், நீண்ட தூரம் நடக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் அவர் மீண்டு வர வாழ்த்து தெரிவிப்பதோடு சோகமடைந்துள்ளனர்.