காதலில் விழுந்த டிடி .. யார் அந்த நபர் ? : தீயாய் பரவும் தகவல்

Dhivyadharshini
By Irumporai Nov 03, 2022 09:39 AM GMT
Report

  விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர்களில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் தான் டிடி என்கிற திவ்யதர்ஷினி , இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக உள்ளார்.

டிடி தொகுப்பாளினி

குறிப்பாக இவர் தொகுத்து வழங்கிய காபி வித் டிடி நிகழ்ச்சி இவரை இன்னும் பிரபலமாக்கியது.

காதலில் விழுந்த டிடி .. யார் அந்த நபர் ? : தீயாய் பரவும் தகவல் | Dhivyadharshini Love

தற்போது வாரநிகழ்ச்சிகளையும் முக்கிய நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகின்றார் தான் தொகுப்பாளினியாக மட்டும் அல்லாமல் நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் டிடி தற்போது சுந்தர் சி இயக்கத்தில் உருவான காஃபி வித் காதல் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

காதலில் விழுந்த டிடி

டிடிக்கு திருமணமாகி விவாகரத்தான நிலையில் தற்போது அவர் ஒருவரை காதலித்து வருவதாக செய்திகள் வெளியான நிலையில் காஃபி வித் காதல் படத்தின் ப்ரோமொஷன் நிகழ்ச்சியில் பேசிய டிடி .

தான் ஒரு முறை வெளிநாட்டில் இருந்த போது ஜெர்மானிய நபர் உடன் மாலை நேரத்தில் ஒன்றாக காபி குடித்ததாக கூறியுள்ளார். ஆனால் அவர் யார் என்பதை கூறவில்லை ஆகவே அந்த நபர்தான் டிடியின் காதலரா ? என கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் டிடியின் தரப்பில் இது குறித்து அதிகாரப்பூர்வமான செய்திகள் வெளியாகவில்லை