இந்தியா கண்டிப்பா ஜெய்க்கும்.. ஆனால் இது நடக்கனும் தினேஷ் கார்த்திக் ஓபன் டாக்
இந்தியா, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி கேப் டவுனில் செவ்வாய் கிழமை நடக்கவுள்ளது. இரு அணிகளும் தலா 1க்கு1 என்று வெற்றி பெற்றுள்ளதால் மூன்றாவது டெஸ்ட், இரு அணிகளுக்கும் வாழ்வா சாவா என்ற நிலையில் இருக்கின்றன
. இந்த நிலையில் இந்தியா வெற்றி பெற, இந்த விஷயம் நடந்தால் போதும் என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், இந்திய அணி கேப் டவுனில் இதுவரை வென்றதே இல்லை.
எனக்கு தனிப்பட்ட முறையில் 2007ஆம் ஆண்டு மோசமான அனுபவமாக கேப் டவுன் இருந்தது. அங்கு இதுவரை எந்த ஆசிய அணியும் வென்றது இல்லை என்பதை அறிவேன். ஆனால் இம்முறை நிலைமை மாறும். இந்தியா நிச்சயம் கேப் டவுன் டெஸ்டில் வெல்லும் எனக் கூறினார்.
மேலும், இந்திய அணி வெற்றிம் பெற முதல் இன்னிங்சில் 400 ரன்களுக்கு மேல் அடித்தால் நிச்சயம் வெற்றி பெறும். 400 ரன்களை கடக்கும் அளவுக்கு நமது வீரர்களிடம் திறமை உள்ளதாக கூறும் தினேஷ்கார்த்திக் தென்னாப்பிரிக்க வீரர்களின் விக்கெட்டை இந்தியா எளிதில் வீழ்த்தி விடலாம்.
கடைசி டெஸ்டில் முகமது சிராஜ்க்கு காயம் குணமடைந்தால் அவருக்கு தான் வாய்ப்பு. வழங்க வேண்டும் இல்லையேனில் இஷாந்த், உமேஷ் யாதவ்க்கு வாய்ப்பு தரலாம் என்று தினேஷ் கார்த்திக் கூறினார்.