இரட்டை இலை சின்னம் வாங்க லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் மீது வழக்கு!
டிடிவி தினகரன் இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்குத் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம் சாட்டி தொடரப்பட்ட வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. ஜெயலலிதா மறைவுக்கு பின் இரு அணிகளாக அதிமுக பிரிந்ததால் இரட்டை இலை சின்னம் தேர்தல் ஆணையம் முடக்கியுள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேர்தலின் போது இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு தொடரப்பட்ட வழக்கில், டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் டெல்லி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தினகரன் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் ஜாமினில் டி.டி.வி.தினகரன் வெளியில் வந்தார். இந்நிலையில், இரட்டை இலைச் சின்னம் பெற லஞ்சம் தேர்தல் ஆணையத்திற்கு, அதிமுக லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு தடை கோரிய மனு மார்ச் 1-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.