சசிகலா விடுதலையை கொண்டாடவே இது நடந்ததாக தெரிகிறது: டிடிவி தினகரன்

minister release jayalalitha
By Jon Jan 28, 2021 04:42 AM GMT
Report

சொத்து குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்றிருந்த சசிகலா இன்று விடுதலையானார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிசிக்சை பெற்று வரும் நிலையில் அங்கிருந்தவாறே இன்று விடுதலையானார்.

இவரை பார்க்க சசிகலாவின் உறவினர்கள், அமமுக கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மருத்துவமனை வாசலில் குவிந்தனர். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி, சசிகலாவின் விடுதலையை கொண்டாடும் விதமாகவே ஜெயலலிதாவின் நினைவிடம் திறக்கப்பட்டதாக கருதுகிறேன் என தெரிவித்தார்.

மேலும் மருத்துவர்களிடம் கலந்து பேசிய பின்னரே சசிகலாவை அழைத்து செல்வது குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.