இனிமேல் தான் பிரச்சனை ஆரம்பம்.. ஸ்லீப்பர் செல்கள் யார் தெரியுமா? டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி
அமமுக-வின் மாநில பொருளாளரும், தமிழக அரசின் முன்னாள் கொறடாவுமாகிய மனோகரனின் தாயார் ராமலெட்சுமி அம்மாள் நேற்று காலமானார். இவரது வீட்டிற்கு சென்று ராமலட்சுமி அம்மாளின் உருவப்படத்திற்கு டிடிவி தினகரன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுசையில், எங்களது ஒரே இலக்கு ஜனநாயக முறைப்படி தேர்தலை சந்தித்து அதிமுக-வை மீட்டெடுப்பது தான்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம், அதிமுகவை கைப்பற்றுவோம். ஸ்லீப்பர் செல்கள் எம்எல்ஏ-வோ, அமைச்சர்களோ கிடையாது, சாதாரண தொண்டர்கள் தான், சின்னம்மா வருகையின் போதே நீங்கள் அதை கவனித்திருப்பீர்கள். தமிழக அரசு தள்ளாடும் அரசாக இருக்கிறது, இந்த அரசின் எந்த செய்தி திட்டங்களும் மக்களுக்கு சென்றடையவில்லை.
அதனால் தான் தினந்தோறும் விளம்பரம் செய்கிறார்கள், வரும் சட்டமன்ற தேர்தலில், ஆர்.கே.நகரில் வெற்றி பெற்று சாதனை புரிந்ததை போல நாங்கள் நிச்சயம் ஆட்சிக்கு வருவோம். இதில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்துள்ளார்.