சசிகலா ’ஒன்றாக இணைய வேண்டும்’ என சொன்னதன் பொருள் என்ன? தினகரன் விளக்கம்

people election dmk vote
By Jon Mar 01, 2021 02:13 PM GMT
Report

ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒன்றாக இணைய வேண்டும் என்றுதான் ச‌சிகலா கூறினார் என்று தினகரன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்த போது, “ஏழை, எளிய மக்களுக்கு உதவும் விழாவாக இன்று தமிழ்நாடு முழுவதும் கொண்டாடி வருகிறார்கள்.

வரும் சட்டமன்றத்தேர்தலில் அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து வெற்றியைப் பெற வேண்டும். தமிழ்நாடு கடனில் தள்ளாடுகிறது என்பது நேற்றைய பட்ஜெட்டில் தெரிந்தது. தமிழகம் வெற்றிநடை போடுகிறது என்பதைவிட கடனில் தள்ளாடுகிறது என்பது தான் உண்மையான வாக்கியம். அமமுக தலைமையில் அமையும் அணி என்பதுதான் முதல் அணியாக இருக்கும்.

நம்முடைய இலக்கு திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதுதான். கூட்டணி குறித்து நாங்கள் சில கட்சிகளுடன் பேசி வருகிறோம். முடிவுக்கு வந்தபின் அறிவிக்கப்படும்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒன்றாக இணைய வேண்டும் என்றுதான் ச‌சிகலா கூறினார். அதிமுக – அமமுக தொண்டர்களை சசிகலா சொல்லவில்லை” என்று விளக்கமளித்துள்ளார்.