பங்காளி சண்டை போடுகிறார் டிடிவி தினகரன்: கார்த்திக் சிதம்பரம் விமர்சனம்
அதிமுக நான் தான் என டிடிவி தினகரன் பங்காளி சண்டை போடுகிறார் என மதுரை விமான நிலையத்தில் எம்பி கார்த்திக் சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். சென்னையிலிருந்து மதுரை விமான நிலையம் வருகைதந்த சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செயலாளரை சந்தித்து பேசினார்.
அப்போது, முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி பற்றி ஆ.ராசா விமர்சித்ததை குறித்து அதிமுகவினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்ற கேள்விக்கு, இந்த ஒரு விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். 2019 ஆகஸ்ட் மாதம் எனது தந்தை முன்னாள் நிதி அமைச்சர் முன்னாள் உள்துறை அமைச்சரை பற்றி விமர்சித்ததை கூகுளில் தேடிப் பாருங்கள், அப்போது எடப்பாடி பழனிச்சாமி எப்படி கீழ்தரமாக விமர்சித்தார் என்று தெரியும். அதற்காக அவர் வருத்தம் தெரிவித்ததாக தெரியவில்லை, ஆனால் பிரச்சாரத்தின் போது வேகமாக பேசுவார்கள் அதற்காக மறுபடியும் அவர் வருத்தம் தெரிவித்து விட்டார், அதற்காக கட்சியும் விளக்கம் அளித்து விட்டது எனக் கூறினார்.
இது தற்போது அதிமுகவின் பாதுகாப்பின்மையை தான் காட்டுகிறது என்றார். வருமான வரி சோதனை ஆளுங்கட்சி புறமும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது இது குறித்த கேள்விக்கு இது ஊடகங்களுக்கு நடுத்தரமாக காட்டுவதற்காக நடைபெறும் கண்துடைப்பு தான், அவர்கள் நடவடிக்கை எடுப்பவர்கள் எல்லாம் பாஜகவின் எதிர்ப்பாக இருக்கும் கட்சிகளுக்கு மட்டும்தான் நடவடிக்கை எடுப்பார்கள் எனக் கூறினார்.
ஜாதி வாரியாககணக்கெடுப்பு எடுக்கப்பட்டு இடம் ஒதுக்கீடு செய்யப்படும் என ஓபிஎஸ் கூறியது குறித்து கேள்வி இது இன்னொரு ஏமாற்று வேலை, பாமக-வுடன் கூட்டணி வேண்டும் என்பதற்காக அறிவிக்கப்பட்ட அறிக்கை பின்னர் சட்ட ரீதியாக நிற்காது என தெரிந்த பின்னர் இதுபோன்று அந்தர் பல்டி அடிக்கிறார்கள் என கூறினார். தேர்தல் நேரங்களில் வேட்பாளர்களுக்கு அதிகரித்துவரும் கொரோனா இந்தக் கேள்விக்கு தற்போது நம்ம ஊர் மக்கள் மாஸ்க் அணிவது இல்லை, 45 வயதிற்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் வேண்டும் என அரசாங்கம் சொன்னாலும் யாரும் போட்டுக் கொள்வது இல்லை எனக் கூறினார்.
அரசியல் சாக்கடையில் துப்புரவு பணியாளர்கள் இல்லை, அதனால் சுத்தம் செய்ய வேண்டும் என கமலஹாசன் பேசியதற்கு குறித்து கேள்விக்கு கமலஹாசன், சீமான், டிடிவி தினகரன் அவருக்கு ஓட்டு அளிப்பவர்கள் அவர்கள் ஜெயிக்க மாட்டார்கள் என தெரிந்தும் வாக்களித்து வருகின்றனர் எனக் கூறினால், அவர்கள் எல்லாம் சூப்பர் நோட்டா என விமர்சித்தார். தேர்தல் என்பது ஒலிம்பிக் போட்டி அல்ல இதில் தங்கப் பதக்கம், வெள்ளிப்பதக்கம், பித்தளை என கிடையாது, வெற்றி பெறுவார்கள் மட்டுமே பாராளுமன்றம் சட்டமன்றத்திற்கு செல்ல முடியும் என கூறினார்.
தினகரன் பங்காளி சண்டை போடுகிறார் நான்தான், அதிமுக அவர்கள் அதிமுக இல்லை என்பதை நிரூபிப்பதற்காக போட்டியிடுகிறார். கமலஹாசன் மாற்றம் வேண்டும் என நினைக்கிறார், ஆனால் இந்த மாற்றத்திற்கு ஒரு வடிவம் இல்லை. மக்கள் நீதி மய்யம் கட்சி தேர்தலுக்கு கூடி, கலையும் கட்சி என விமர்சித்தார், இவர்களால் நிரந்தர மாற்றத்தை கொண்டு வரமுடியும்.
திமுகவில் குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டும் தான் பதவி கிடைக்கும், மற்றவர்கள் ஓரத்தில் தான் நிற்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி பேசியது குறித்த கேள்விக்கு
ரவீந்திரநாத் திற்கு சீட்டு கொடுக்கும் பொழுது யோசித்திருக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.