பணத்தை வாங்கிட்டு கதைய முடிச்சிடுங்க: டிடிவி தினகரன்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்து கட்சிகளும் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், விழுப்புரத்தில் தன்னுடைய கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
பிரச்சார கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், பழனிசாமி சொல்கிறார் நான் ஊர்ந்து போகிறதற்கு பல்லியா? என்று, ஆனால் அவர் பச்சோந்தி. அதிமுக, திமுக இருவரும் மாறி மாறி குற்றம்சாட்டிக்கொள்கின்றானார். ஆனால், இருவரையும் தாக்கி பேசும் தகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு மட்டுமே உள்ளது.
மேலும், நாட்கள் கடந்து போவதால், பயம் வந்து ஆர்.கே.நகரில் கொடுத்த மாதிரி ரூ.6,000 கூட கொடுப்பாங்க. அது உங்கள் பணம். ஆர்.கே.நகர் மக்கள் மாதிரி வாங்கிட்டு கதையை முடிச்சிருங்க” என்றார்