திமுக, அதிமுக போன்ற துரோகி கட்சிகள் ஒழிய வேண்டும்: டிடிவி தினகரன்

party dmk Dhinakaran ammk aiadmk
By Jon Mar 25, 2021 01:42 PM GMT
Report

சிறுபான்மையின மக்களுக்கு துரோகியாக உள்ள திமுகவை வரும் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார். வேலூரில் நேற்றிரவு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், சிறுபான்மையின மக்களுக்கு துரோகியாக உள்ள திமுகவை வரும் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும். திமுக, அதிமுக போன்ற துரோகி கட்சிகளும் ஒழிய வேண்டும், வரும் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கூட்டணியை ஆதரித்து வாக்களிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

தமிழகத்தில் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஆட்சி அமைய அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு வாக்கு அளிக்குமாறு பொதுமக்களை கேட்டுக் கொண்டார். மேலும் சமூக நீதி மற்றும் சம உரிமை ஆகிய கோட்பாட்டில் ஆட்சியை நடத்த மக்கள் வரும் சட்டமன்ற தேர்தலில் தங்கள் கூட்டணி கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கூறினார்.

தமிழகத்தில் ஊழலற்ற மக்கள் விரும்புகின்ற ஆட்சி அமைக்க மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் எனவும், வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்த வேண்டும் என அவர் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.