தேர்தல் நேரத்தில் காமெடி செய்யும் ஒரே ஆள் தினகரன் தான்: அமைச்சர் பாண்டியராஜன் கிண்டல்
பரபரப்பான தேர்தல் சமயத்தில் டிடிவி தினகரன் காமெடி செய்கிறார் எனக் கிண்டல் செய்துள்ளார் அமைச்சர் பாண்டியராஜன். திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த திருமுல்லைவாயிலில் பாமக, திமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சியினர் 250 பேர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தஅமைச்சர் பாண்டியராஜன்.பரபரப்பான தேர்தல் அரசியல் சூழலில், காமெடி செய்ய ஆட்கள் வேண்டும் அல்லவா டிடிவி தினகரன் காமெடி பண்ணிக்கொண்டு இருக்கிறார். அமமுக தலைமையில் அதிமுக கூட்டணி அமைவதற்கு வாய்ப்பில்லை. பாமகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை முடிந்துள்ளது.
அதுபோலவே கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சிகளுடனும் விரைவில் உடன்பாடு ஏற்படும். இதிலிருந்து திசைமாற்ற யார் என்ன முயற்சி செய்தாலும் அதில் அதிமுக சிக்காது என பேசினார். தொடர்ந்து தேமுதிகவின் எல்.கே சுதீஷ் பேஸ்புக் பதிவு குறித்த கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் பாண்டியராஜன் ,அதிமுக - தேமுதிக இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக நடப்பதாக கூறினார்.
மேலும் எங்களால் என்ன தர முடியுமோ அதை நாங்கள் தருவோம். முதல்வராக வேண்டும் என எல்லோருக்கும் ஆசை இருக்கத்தான் செய்யும், எங்கள் முதல்வர் எனக் கூறுவதற்கு தகுதியான மனிதர் விஜயகாந்த் என கூறினார்.