டிடிவி தினகரனின் தேர்தல் அறிக்கை 12ம் தேதி வெளியீடு - அதிமுக, திமுக கூட்டணியையே மிஞ்சுவாரா?
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வருகிற 12ஆம் தேதி தேர்தல் அறிக்கை வெளியிடும் என்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன் அறிவித்திருக்கிறார். இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது - இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் லட்சியக் கனவுகளை வென்றெடுக்கப் போராடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை வெளியீட்டு சிறப்பு பொதுக்கூட்டம் வரும் 12.03.2021 வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில், சென்னை ராயப்பேட்டை YMCA மைதானத்தில் நடைபெற உள்ளது.
இதில் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் கழகத்தின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு சிறப்புரையாற்றவிருக்கிறார்கள். இப்பொதுக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்று உரையாற்ற உள்ளார்கள்.

இக்கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்டம், ஊராட்சி, கிளை கழக செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள், அனைத்து சார்பு அணிகளின் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் பொதுமக்கள் என அனைவரும் கொரோனா கால வழிமுறைகளைப் பின்பற்றி முகக்கவசம் அணிந்து போதிய சமூக இடைவெளியுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.