தமிழக முதல்வர் குறித்து சர்ச்சை பேச்சு: டிடிவி தினகரன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதால் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீது 5 பிரிவுகளின் கீழ் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 23ம் தேதி விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் அமமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டிடிவி தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது விழுப்புரம் தொகுதி அமமுக வேட்பாளர் பாலசுந்தரம், செஞ்சி தொகுதி அமமுக வேட்பாளர் கௌதமசாகர், வானூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் கணபதி, திண்டிவனம் தொகுதி வேட்பாளர் சந்திரலேகா பிரபாகரன், மயிலம் தொகுதி தேமுதிக வேட்பாளர் சுந்தரேசன் உள்ளிட்ட கூட்டணி வேட்ப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது டிடிவி தினகரன் பேசுகையில், ”தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் ஆகியோரை அவதூறாக பேசியதாக விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
வழக்கில், தேர்தல் நன்னடத்தை விதிகள் மீறியது, தனிப்பட்ட முறையில் தனிநபரை விமர்சனம் செய்தல், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவதூறாக பேசியது உள்ளிட்ட ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.