நான் ஒரு தொகுதியில் அல்ல, 2 தொகுதிகளில் போட்டியிடபோகிறேன்- டிடிவி பரபரப்பு பேட்டி
தமிழகம் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளன. இத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தனது தேர்தல் பணிகளை மும்முரமாக செய்து வருகின்றன. அதனையடுத்து, நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் வேட்பாளர் நேர்காணல் நடைபெற்றது.
அப்போது அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் இந்த நேர்காணல் நடந்தது. சென்னை, திருவள்ளூர், திருப்பூர், ஈரோடு, கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் உள்பட 21 மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். இந்த நேர்காணல் முடிந்தபிறகு செய்தியாளர்களை டிடிவி தினகரன் சந்தித்தார்.
‘ அப்போது அவர் பேசுகையில், நான் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று அவதூறு கருத்துகளை சிலர் பரப்புகின்றனர். இத்தேர்தலில் நான் ஒரு தொகுதியில் அல்ல, 2 தொகுதிகளில் போட்டியிடபோகிறேன். நாளை (மார்ச் 10) வேட்பாளர்களின் முதல் பட்டியலை அறிவிக்க இருக்கிறேன்.
மக்கள் நீதி மய்யத்தில் இருந்து யாரும் என்னிடம் கூட்டணி குறித்து பேசவில்லை. மற்ற கட்சிகள் குறித்து நான் பேச விரும்பவில்லை என்றார்.