வேட்பாளர் பட்டியல், கூட்டணி கட்சிகள் - டிடிவி தினகரன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.!

election party sasikala tamilnadu dhinakaran
By Jon Mar 10, 2021 02:25 PM GMT
Report

அமமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும் என டிடிவி தினகரன் அதிரடியாக தெரிவித்திருக்கிறார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், இன்று முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது. இதனையடுத்து, அடுத்த கட்ட வேட்பாளர் பட்டியல் வர உள்ளது.

ஒரு சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அமமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய உள்ளன. கூட்டணி பேச்சுவார்த்தை இறுதியான பிறகு அறிவிப்பு வெளியாகும்.

வீட்டில் ஒருவருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தை நாங்கள் அறிவிக்க உள்ளோம். மக்கள் ஏமாற்றும் அறிவிப்புகளுக்கு வாக்களிக்க மாட்டோம் என்றார்.  


Gallery