’’தீய கட்சி திமுக , துரோக கட்சி அதிமுகவை ஒழிக்க தான் இந்த கூட்டணி’’ - இது டிடிவி தினகரன் சபதம்
தீய கட்சியான திமுக , துரோக கட்சியான அதிமுகவை வீழ்த்துவதே எங்களது நோக்கம் என அமுமுக கட்சி தலைவர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த தேமுதிக அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தது. கூட்டணி தொகுதி உடன்பாட்டில் சுமுகமான பேச்சு வார்த்தை எட்டப்படாத நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இதுகுறித்த அறிவிப்பை நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
தேமுதிக, அதிமுக கூட்டணியில் வெளியேறியதும் தேமுதிக வேறு கட்சியுடன் கூட்டணி அமைக்குமா அல்லது தனித்து போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்தது. தேமுதிக அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறிய சில நிமிடங்களில் அக்கட்சிக்கு மக்கள் நீதி மய்யத்தில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் தேமுதிக அமமுகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளது.
அமமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேமுதிக பொதுசெயலாளர் விஜயகாந்தை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று சந்தித்து பேசியுள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு வந்த தினகரன் விஜயகாந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அப்போது அவருடன் கட்சியின் துணை செயலாளர் எல்.கே சுதீஷ் உடனிருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமுமுக கட்சி தலைவர் தினகரன் நடைமுறைக்கு சாத்தியமற்ற வாக்குறுதிகளை அதிமுக கூறி வருவதாக கூறினார்.
மேலும், கூட்டணி அமைத்தது ஏன் என்ற கேள்விக்கு பதில் கூறிய தினகரன் 20 வருடமாக கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்குதான ஆதரவு கொடூப்பிங்களா? என கேள்வி எழுப்பியவர் ‘தீய கட்சியான திமுக , துரோக கட்சியான அதிமுகவை வீழ்த்துவதே எங்களது நோக்கம்’ என்றும் தெரிவித்துள்ளார்.