பெற்றோர்களை இழந்த 100 குழந்தைகளை தத்தெடுத்த இளைஞர்...

Covid second wave
By Petchi Avudaiappan Jul 03, 2021 09:04 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

கொரோனா இரண்டாம் அலையில் பெற்றோர்களை இழந்த 100 குழந்தைகளை டேராடூனை சேர்ந்த இளைஞர் தத்தெடுத்து வரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்பால் பல குழந்தைகள் தங்களின் பெற்றோரை இழந்த நிலையில், அவர்களுக்கு மத்திய, மாநில அரசு சார்பில் எதிர்காலத்திற்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதனிடையே உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்த ஜாய் அறக்கட்டளை நிறுவனர் ஜெய் ஷர்மா கொரோனா இரண்டாம் அலையில் பெற்றோரை இழந்த 100 குழந்தைகளை தத்தெடுக்கும் பணியை தொடங்கியுள்ளார். 

இதுவரை இருபது குழந்தைகளை தத்தெடுத்துள்ளதாக தெரிவித்துள்ள அவர் , அந்த குழந்தைகளின் இருப்பிடம், கல்வி , சுகாதாரம் போன்ற தேவைகளுக்கு முழு உதவிசெய்ய உள்ளதாக கூறியுள்ளார்.

அடுத்த வாரம் ஐம்பது குழந்தைகளை தத்தெடுக்க இலக்கு வைத்துள்ள ஜெய்ஷர்மா, தனது குழு கிராமங்கள் மற்றும் உள்ளூர் பகுதிகளுக்கு சென்று இதுபோன்ற குழந்தைகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.