உபுல் தரங்கா, கப்தில் அதிரடி வீண்: சாம்பியன் பட்டம் வென்ற ஷிகர் தவானின் படை
புனே பேந்தர்ஸ் அணிக்கு எதிரான உலக லெஜெண்ட்ஸ் ப்ரோ டி20 லீக் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று, துபாய் ராயல்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
கப்தில், தரங்கா கூட்டணி சரவெடி
உலக லெஜெண்ட்ஸ் ப்ரோ டி20 லீக் தொடரின் இறுதிப்போட்டி கோவாவின் 1919 ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது.
After 1️⃣0️⃣ days of legendary cricketing action in Goa, the hunt is over and the Dubai Royals are officially walking away with the gold 🌴🥇
— FanCode (@FanCode) February 4, 2026
.
.
[Finals, Legends, Shikhar Dhawan, Dubai Royals, World Legends Pro T20 League, Trophy, Celebration, pic.twitter.com/ekWFOBAPZy
இதில் ஷிகர் தவானின் துபாய் ராயல்ஸ் அணியும், கிரோன் பொல்லார்டின் புனே பேந்தர்ஸ் அணியும் மோதின.
முதலில் களமிறங்கிய புனே பேந்தர்ஸ் அணியில் மார்டின் கப்தில் மற்றும் உபுல் தரங்கா கூட்டணி சரவெடி ஆட்டம் ஆடியது.

அரைசதம் அடித்த உபுல் தரங்கா (Upul Tharanga) 39 பந்துகளில் 55 ஓட்டங்கள் விளாசியும், மார்டின் கப்தில் (Martin Guptill) 40 பந்துகளில் 62 ஓட்டங்கள் விளாசியும் ஆட்டமிழந்தனர்.

துபாய் ராயல்ஸ் சாம்பியன்
ஷேன் வாட்ஸன் (Shane Watson) அட்டமிழக்காமல் 24 பந்துகளில் 50 ஓட்டங்கள் விளாச, புனே பேந்தர்ஸ் 194 ஓட்டங்கள் குவித்தது.
பின்னர் ஆடிய துபாய் ராயல்ஸ் அணியில் கேப்டன் ஷிகர் தவான் (Shikhar Dhawan) 39 பந்துகளில் 64 ஓட்டங்கள் விளாசி அவுட் ஆனார்.
அடுத்து மன்விந்தர் பிஸ்லா 44 பந்துகளில் 67 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழக்க, சமித் பட்டேல் 28 (14) ஓட்டங்களும், அம்பத்தி ராயுடு 29 (17) ஓட்டங்களும் எடுக்க துபாய் ராயல்ஸ் 19 ஓவர்களில் 197 ஓட்டங்கள் குவித்து வெற்றி பெற்றது.
இதன்மூலம் துபாய் ராயல்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஷிகர் தவான் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |