எச்சரிக்கை கொடுத்த ஷிகர் தவான் : முதல் குறியே கேஎல் ராகுல் ?

Shikhar Dhawan KL Rahul Ireland Cricket Team
By Irumporai 3 மாதங்கள் முன்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி வரும் 18ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

தவான் எச்சரிக்கை

இந்த நிலையில் போட்டி தொடங்குவதற்கு முன் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்திய அணி துணை கேப்டன் ஷிகர் தவான் சக வீரர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். 

எச்சரிக்கை கொடுத்த ஷிகர் தவான்  : முதல் குறியே கேஎல் ராகுல் ? | Dhawan Press Conference Ahead Of Zimbabwe Series

ஜிம்பாப்வே கடந்த சில காலமாக நல்ல கிரிக்கெட்டை விளையாடி வருகின்றனர். சமீபத்தில் கூட வங்கதேசத்துக்கு எதிராக ஒரு நாள் போட்டி மற்றும் டி20 போட்டியில் வென்றுள்ளனர்.

சிறப்பாக விளையாடினால் மட்டுமே ஒரு அணி வெற்றி பெற முடியும்.இதனால் ஜிம்பாப்வே அணியை யாரும் சாதாரணமாக நினைத்து விடக்கூடாது. ஜிம்பாப்வே அணியை வீழ்த்த கொஞ்சம் போராடி தான் ஆக வேண்டும்.

கேஎல் ராகுல்

இந்திய அணிக்கு கே எல் ராகுல் திரும்பி, அணியை வழிநடத்துவது மிகவும் நல்ல விஷயம்.கேஎல் ராகுல் இந்திய அணியின் ஒரு முக்கியமான வீரர்.

ஆசிய கோப்பை நடைபெறுவதால் இந்த தொடர் அவருக்கு முக்கியமானதாக இருக்கும். இதில் அவர் சிறப்பாக விளையாடுவார் என நான் நம்புகிறேன். இந்த தொடர் அவருக்கு நல்ல அனுபவத்தை கொடுக்கும் என தவான் கூறியுள்ளார்.

இந்த நிலையில் இந்த பேட்டியின் மூலம் ஜிம்பாப்வே அணியை சாதாரணமாக நினைத்து விடக்கூடாது என இளம் வீரர்களுக்கு எச்சரிக்கை கொடுத்துள்ள ஷிகர் தவான், கே எல் ராகுலுக்கு இது முக்கியமான தொடர் என மறைமுகமாக பேட்டியின் மூலம் அழுத்தம் கொடுத்து இருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்.