INDvsNZ : ஓபனிங் பார்ட்னர்ஷிப்பில் அசத்திய தவான் கில் ஜோடி

By Irumporai Nov 25, 2022 04:25 AM GMT
Report

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 1-0 என்ற கணக்கில் கைபற்றியது.

இந்தியா vs நியூசிலாந்து 

இந்த நிலையில் இன்றைய முதலாவது ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன்பார்க்கில் நடக்கின்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்ய இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

தவான் கில்ஜோடி அசத்தல்

20 ஓவர் தொடருக்கான இந்திய அணியை ஹர்திக் பாண்ட்யா வழிநடத்தினார். ஒரு நாள் போட்டி அணிக்கு கேப்டனாக ஷிகர் தவான் செயல்பட உள்ளார்.

ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுல், பும்ரா, முகமது ஷமி உள்ளிட்ட மூத்த வீரர்கள் இல்லாத நிலையில் அதிகமான இளம் வீரர்களுடன் இந்தியா களம் இறங்கியுள்ள நிலையில் ஓபனிங் பார்ட்னர்ஷிப்பில் களம் இறங்கியுள்ள தவான் - கில் ஜோடி 124 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளது.